Home › Groups › Tamilan Radio News.
Tamilan Radio News. Telegram
Telegram Channel Link

Tamilan Radio News. Telegram Channel Link

★★★★★ 0.0 (0 ratings)
👁 2 views ↗ 0 joins
🇮🇳 India 🌐 Tamil # News & Magazines
About this telegram channel link
உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள். Tamilan Radio News. https://t.me/TamilanRadioNews
Telegram Channel

Latest public posts from this Telegram channel.

15 subscribers
16 Jan 2022 latest post
Click to fetch the latest posts directly from Telegram.
நாட்டில் இன்று இதுவரை 2,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.எனவே நாட்டில் கொரோனா நோயாளர்களில் மொத்த எண்ணிக்கை 210,102 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நீக்கப்படவுள்ளது.இந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.உணவு மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே பொதுமக்கள் செல்லவேண்டும் என பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
அரச வைத்தியசாலைகளில் உரிய சேவைகள் கிடைக்காவிட்டால் அது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நோயாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
*இன்றைய நாள் சிறுகதை.**" 100 சதவீத அன்பை காட்டுங்கள் "* ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.*எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!*உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
*இன்றைய நாள் பொது அறிவுத் தகவல்கள்.*01. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி.02. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி.03. சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்.04. உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்.05. உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
வரலாற்றில் இன்று23/05/2021-ஞாயிறு=========================உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews1498 : இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் மத சீர்திருத்தவாதி ஜிரோலாமோ சவோனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.1533 : இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி - கேத்ரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது.1568 : நெதர்லாந்து ஸ்பெயினிடமிருந்து விடுதலையை அறிவித்தது.1633 : இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்ச்சுகலிடம் இருந்து டச்சு கைப்பற்றியது.1788 : அமெரிக்காவின் தெற்கு கரோலினா அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட எட்டாவது மாநிலமாக இணைந்தது.1829 : வியன்னாவில் சிரில் டெமியன் என்பவருக்கு அக்கார்டியன் இசைக்கருவிக்கான காப்புரிமை வழங்கப்பட்டது.1846 : மெக்ஸிகோ அமெரிக்கா மீது போரை அறிவித்தது 1911 : நியூயார்க் பொது நூலகம் நிறுவப்பட்டது.1915 : முதலாம் உலகப் போர் :- இத்தாலி, ஆஸ்திரியா- ஹங்கேரி மீது போரை அறிவித்தது.1919 : மிக்கி மவுஸின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் வெளிவந்தது.1939 : அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஸ்குவாலஸ் சோதனை ஓட்டத்தின்போது நியூ ஹாம்ப்ஷயர் கடலில் மூழ்கியதில் 24 மாலுமிகள் உயிரிழந்தனர்.1945 : இந்தியாவில் முதல் முதல் விமானத் தபால் அறிமுகப்படுத்தப்பட்டது.1949 : பனிப்போர் :- மேற்கு ஜெர்மனி என்ற நாடு அமைக்கப்பட்டது.1951 : திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் கட்டாயமாக திபெத்தியர்கள் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.1958 : அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் -1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.1984 : பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்தியப் பெண் ஆனார்.1985 : ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 329 பேரும் உயிரிழந்தனர்.1995 : ஜாவா நிரலாக்க மொழியின் முதல் பதிப்பு வெளியானது.1998 : வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில்பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75 சதவீதம் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.2006 : அலாஸ்காவின் சுழல் வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.2008 : இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அனைத்துலக நீதிமன்றம் நடுப்பாறைகள் என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண் பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் அளித்து தீர்ப்பு கூறியது.இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வந்த 29 ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.2015 : டெக்சாஸ் மற்றும் ஒக்லஹோமாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 46 பேர் உயிரிழந்தனர்.2016 : சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேர் கொல்லப்பட்டனர்.200 பேர் காயமடைந்தனர். ஏமன், ஏடன் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய நாள் சிந்தனை பகிர்வில் ;-***************************_'உண்மை'_**_இருக்கும் இடத்தில்.._**_பிடிவாதம் இருக்கும்..!_**_'நேர்மை'_**_இருக்கும் இடத்தில்.._**_நல்ல நடத்தை இருக்கும்..!_**_'அதிக அன்பு'_**_இருக்கும் இடத்தில்.._**_கோபம் இருக்கும்..!!_*இந்த நாள் இனிய நன்நாளாக அமைய குழுவில் உள்ள அனைவருக்கும் *_இனிய காலை வணக்கம்_*உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் இடம்பெற்றிருந்தபோதும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன, கவனக்குறைவு காரணமாக தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.எனவே குறித்த பெயர்ப்பலகை மீண்டும் சரிசெய்யப்பட்டு மாற்றப்படும் என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன குறிப்பிட்டார்.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
பங்களாதேஷ் எதிர் இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி நாளை இலங்கை நேரம் படி 12.30 க்கு தொடக்கம்.போட்டியை நேரடியாக பார்க்க இலங்கை Eye தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
இன்றைய நாள் சிந்தனை பகிர்வில் ;-*அறிவுரைகளையும், ஆறுதல்களையும் விட..!* *சக்தி வாய்த்தது "அனுபவம்"*இந்த நாள் இனிய நன்நாளாக அமைய குழுவில் உள்ள அனைவருக்கும் *இனிய காலை வணக்கம்*உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
நுவரெலியா – இராகலை பகுதியில் 42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர்.இதில் இருவர், அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இன்று காலை, இராகலை- ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை, சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற ட்ரக்டர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.X-PRESS PEARL என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தற்போது கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார சபை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
*2020ம் ஆண்டு உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வழிகாட்டி கைநூலை PDF வடிவில் வெளியிட்டுள்ளது.*🌐 தேவையான மாணவர்கள் கீழ் காணப்படும் PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளவும்உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 38 உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
*இன்றைய நாள் பொது அறிவுத் தகவல்கள்**Tamilan Radio News.**21 05 2021*01. உலகிலேயே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்.02. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்.03. உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்.04. உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்.05 உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்.உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
*today motivational story.**Tamilan Radio News.**21 05 2021**முயற்சி திருவினையாக்கும்..!!*ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.ஒருநாள் திடீரென்று"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?'' என்று சந்தேகம் வந்தது.பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,"இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்."உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,எப்படியும் உணவு கிடைத்துவிடும்'' என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.அப்போது ஒரு குரல் கேட்டது. "என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது."குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது''கழுகு பின்னால் சென்று பார்த்தது.அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் , "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'இறைவன் பதிலளித்தார்."குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்."கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை.*முயற்சி திருவினையாக்கும்*...உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews
*வரலாற்றில் இன்று.**Tamilan Radio News.**21/05/2021-வெள்ளி.*=========================உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிய எமது Telegram குழுவில் இணைந்திடுங்கள்.Tamilan Radio News.https://t.me/TamilanRadioNews878 : சிசிலியின் சைராகஸ் 9 மாத முற்றுகைக்குப் பின்னர் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது.996 : ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடிசூடினார்.1471 : இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஹென்றி லண்டன் டவரில் குத்திக் கொலை செய்யப்பட்டார்.1502 : ஜோவா- டா- நோவா எனும் போர்ச்சுகீஸ் மாலுமியால் செயின்ட் ஹெலினா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.1792 : ஜப்பானின் கியூஷூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியில் 14,500 பேர் உயிரிழந்தனர்.1851 : கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.1853 : லண்டன் ரீஜண்ட் பூங்காவில் மீன் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.1859 : பிக்பென் மணிக்கூடு முதல் முறையாக இயக்கப்பட்டது.1864 : அயோனியன் தீவுகள் கிரேக்கத்துடன் மீண்டும் இணைந்தது.1871 : முதலாவது பல் சட்ட ரயில்பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.பிரெஞ்சுப் படைகள் பாரிஸைத் தாக்கின.ஒரு வார முற்றுகையில் 20,000 பேர் கொல்லப்பட்டு, 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.1881 : அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.1904 : அகில உலக கால்பந்து கழகம் துவக்கப்பட்டது.1917 : அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.1937 : ஆர்டிக் பெருங்கடல் பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுக் கூடம் ஒன்றை சோவியத் ஒன்றியம் அமைத்தது.1939 : கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஆறாம் ஜார்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.1941 : இரண்டாம் உலகப்போர் :- பிரேஸிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ராபின் மூர் என்ற அமெரிக்க போர்க்கப்பல் ஜெர்மனியின் யூ படகினால் மூழ்கடிக்கப்பட்டது.1961 : அலபாமாவில் நடந்த இன வன்முறைகளை அடுத்து அங்கு ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.1976 : கலிபோர்னியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.1982 : பிரிட்டிஷ் போர்க்கப்பல் HMS ஆர்டென்ட் அர்ஜெண்டினா ஏவுகணையால் தாக்கப்பட்டு மூழ்கியது.1991 : ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப் பட்டார்.எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.1994 : ஏமன் ஜனநாயக குடியரசு ஏமனில் இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.1996 : தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் ஒன்று விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.1998 : இந்தோனேஷியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து 32 ஆண்டுகள் ஆட்சி செய்தசுகார்ட்டோ பதவி விலகினார்.2003 : வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.பலேரிக் தீவுகளை சுனாமி தாக்கியது.2012 : ஏமன், சனா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
Telegram Channel Link information
Country 🇮🇳 India
Language Tamil
Type Telegram Channel Link
Subscribers 15
Rate this group

How would you rate this community?

0.0 ★ Join Group →