Home › Groups › Tamil Cinema News
Tamil Cinema News Telegram
Telegram Channel Link

Tamil Cinema News Telegram Channel Link

★★★★★ 0.0 (0 ratings)
👁 6 views ↗ 1 joins
🇮🇳 India 🌐 Tamil # News & Magazines
About this telegram channel link
சினிமா சார்ந்த செய்திகளை விரும்பி படிப்பவரா நீங்கள்? அப்பொழுது எங்கள் சினிமா செய்திகள் சேனல் இல் இணையவும். https://t.me/tamil_cinema_news
Telegram Channel

Latest public posts from this Telegram channel.

61 subscribers
19 Nov 2025 latest post
Click to fetch the latest posts directly from Telegram.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/19/xlarge/1383793.jpg கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI). வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். இந்த விழாவின் தொடக்க விழாவின் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்றப் படம் திரையிடப்படுகிறது. 1975இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கலைச் சாதனைக்காக விழாவில் கௌரவம் செய்யப்பட உள்ளார். https://static.hindutamil.in/hindu/uploads/common/2025/11/19/1763546177268.jpeg ’ஆநிரை’ படத்தில் ஒரு காட்சி ரஜினி கௌரவம் செய்யப்படும் அதேவேளையில்,இப்படவிழாவில் 3 தமிழ்ப் படங்கள் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்க இருக்கின்றன. அவற்றில் ‘தங்க மயில்’ விருதுக்கான சர்வதேசப் போட்டிப் பிரிவில், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ இடம் பிடித்துள்ளது. கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் படவிழாவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக, திரையிடப்படுகிறது. விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்!https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383770.jpg தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் இருக்கிறது அல்லவா? அதற்கு இவர்தான் மியூசிக்’ என்று என்னை காட்டுகிறார். உடனே அந்த சிறுவன் எனக்கு கைகொடுத்தான். இது போன்ற சின்ன பசங்களுக்கு கூட என் பாடல் தெரிகிறது என்பதற்காகத்தான் நான் காப்புரிமை கேட்பதில்லை” என்று தேவா கூறினார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார்https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383769.jpg அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் கடந்த நவ.15 அன்று ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்த தின் மேன் கோஸ் ஹோம்- 1944: ஓவியத்தில் ஒற்று ரகசியம் | ஹாலிவுட் மேட்னி 6https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383745.jpg ‘த தின்மேன்’தொடரின் ஐந்தாவது படைப்பு ‘த தின் மேன் கோஸ் ஹோம்- 1944’. ஓய்வெடுக்கச் சென்றவர் ஓவிய(னின் மரண)த்தில் ஒளிந்திருக்கும் ஒற்று ரகசியத்தை கண்டறிவதே ஒருவரிக் கதை. நிக், தனது மனைவி நோரா, செல்ல நாய் அஸ்டாவுடன் ‘சிகமோர் ஸ்பிரிங்ஸ்’என்ற சொந்த கிராமத்துக்கு வருகிறார்.வாஞ்சையுடன் வரவேற்கிறார் அம்மா. அப்பா டாக்டர் பெர்ட்ரம் சார்லஸுக்கு நிக் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். புல்வெளியில் ஊஞ்சல் கட்டி படுத்தபடி, நோராவிடம் பழைய நினைவுகளை அசை போடுகிறார் நிக்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383742.jpg பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்பிரபாஸை இயக்கும் ‘நாட்டு நாட்டு’ நடன இயக்குநர்https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383732.jpg பிரபாஸ் நடிக்கவுள்ள படமொன்றை இயக்கவுள்ளார் ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்.’தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரண்டு படங்களுமே பெரும் பொருட்செலவில் தயாராகி வருகின்றன. இதில் ஜனவரி 9-ம் தேதி ‘தி ராஜா சாப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்2 பாகங்களாக உருவாகிறது பிரபாஸின் ‘ஃபவுஸி’ இயக்குநர் தகவல்https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383703.jpg துல்​கர் சல்​மான், மிருணாள் தாக்​குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீ​தா​ராமம்’ படத்தை இயக்​கிய​வர் ஹனு ராகவபுடி. இவர், அடுத்து இயக்​கும் ‘ஃபவுஸி’ என்ற படத்​தில் பிர​பாஸ் கதா​நாயக​னாக நடிக்​கிறார்.மிதுன் சக்​கர​வர்த்​தி, ஜெயப்​பிர​தா, இயான்வி முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இப்படத்​துக்கு விஷால் சந்​திரசேகர் இசை அமைக்​கிறார். வரலாற்​றுப் பின்​னணி​யில் உரு​வாகும் இந்​தப் படத்​தில் பிர​பாஸ் போர்​வீர​னாக நடிக்​கிறார். இந்த பான்​-இந்​தியா படத்​தின் டைட்​டில் லுக் அக்​டோபரில் வெளி​யானது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்ரஜினிகாந்தை இயக்குகிறாரா தனுஷ்?https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383705.jpg ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது.கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்ரஜினியை தனுஷ் இயக்குகிறாரா? - வெளியான லேட்டஸ்ட் தகவல்!https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383733.jpg ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை சுந்தர்.சி இயக்க, கமல் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்த சில தினங்களிலேயே, அப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்ஓடிடியில் நவ.21-ல் வெளியாகிறது ‘பைசன்’https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/18/xlarge/1383725.jpg ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’. ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது உலகளவில் ரூ.80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனிடையே இப்படம் நவம்பர் 21-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Channel Link information
Country 🇮🇳 India
Language Tamil
Type Telegram Channel Link
Subscribers 61
Rate this group

How would you rate this community?

0.0 ★ Join Group →