Home › Groups › OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 Telegram
Telegram Channel Link

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰 Telegram Channel Link

★★★★★ 0.0 (0 ratings)
👁 3 views ↗ 0 joins
🇮🇳 India 🌐 Tamil # News & Magazines
About this telegram channel link
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International. More Links: @TGLinksOLBN
Telegram Channel

Latest public posts from this Telegram channel.

864 subscribers
06 Oct 2026 latest post
Click to fetch the latest posts directly from Telegram.
Telegram post media "தன்னைத் தானே புறக்கணிப்பதன்" ஆபத்தான அறிகுறிகள்

5-வது இடம்: கழிவறைக்குச் செல்வதைத் தள்ளிப்போடுதல்
・செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று நினைப்பது
・செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்த விருப்பமின்மை
・தெரியாமலேயே, அடக்க முடியாத எல்லை வரை அதைத் தள்ளிப்போடுவது

4-வது இடம்: குளிப்பதைத் தவிர்த்தல்
・எப்படிப் பார்த்தாலும் குளிப்பது ஒரு பெரிய வேலையாகத் தெரிவது
・பல் துலக்குவதைக் கூடத் தள்ளிப்போடுவது
・உடை மாற்றுவதற்குக்கூடச் சக்தியில்லாமல், ஆர்வமில்லாமல் உடுத்திய உடைகளையே மீண்டும் உடுத்துவது.

3-வது இடம்: அரைகுறையான அல்லது கவனக்குறைவான உணவுமுறை

・வயிறு பசியால் உறுமினாலும், சாப்பிடுவது ஒரு பெரிய சிரமமாகத் தெரிவது
・சரியான காலை உணவை எடுத்துக்கொள்ளாமல், காபி, டீயை மட்டுமே நம்பியிருப்பதால் சத்துணவு குறைபாடு ஏற்படுவது.
・குடும்பத்தினருக்குச் சிறப்பாகச் சமைத்தாலும், தனக்கு என்று வரும்போது சுருக்கிக்கொள்வது

2-வது இடம்: உடல் அல்லது மனதின் சோர்வு சமிக்ஞைகளைப் புறக்கணித்தல்

・மிகவும் சோர்ந்து போயிருந்தாலும், "இன்னும் கொஞ்சம் சமாளித்துவிடலாம்" என்று நினைப்பது
・வலி இருக்கிறதா? அதைக் கவனிப்பது எரிச்சலூட்டும் விஷயமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது
・மருத்துவமனைக்குச் செல்வதையோ அல்லது பரிசோதனைகளையோ காலவரையின்றித் தள்ளிப்போடுவது

1-வது இடம்: உங்கள் சொந்த உணர்வுகளை முற்றிலுமாகப் புறக்கணித்தல்

・ஒரு 'மொஜிடோ' காபி குடிக்க ஆசைப்பட்டாலும், "இது ஆடம்பரமான செலவோ?" என்று நினைத்துத் தவிர்ப்பது
・தனக்காகச் செலவிடும் சில செலவை கூட "வீண் செலவு" என்று நினைப்பது.
・"இது எனக்கு மிகவும் பிடித்தது" என்ற எண்ணம் மாறி, "இது தேவையில்லை," என்ற மனநிலைக்கு மாறுவது

உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கிறதா?

@OLBNNews
Telegram post media இந்திய மொழிகள் அனைத்தையும் ஒரு சவாலுக்கு அழைக்கிறேன்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலை, இதே போன்று உங்கள் மொழியில் உருவாக்கி வெளியிட முடியுமா?

துணிந்து முயற்சிக்கும் மொழிகளுக்கு — வெற்றி பெறாவிட்டாலும் — ஆறுதல் பரிசு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்! 😄

சமஸ்கிருதத்திற்கும் தைரியம் இருந்தால் இந்த CHALLENGE-ல் கலந்துகொள்ளலாம்! 😉

JUST READ THE WORDS BELOW AND KNOW WHY TAMIL IS A CLASSICAL LANGUAGE.

ஏன் தமிழ் ஒரு செம்மொழி?

கீழே உள்ள தமிழ்ச் சொற்களை வாசித்து, அவற்றின் சொல்வளத்தையும் நுண்மையையும் ரசித்துப் பாருங்கள்.

தமிழ்ப் புவியியல் | Tamil Geography 🌍

River — ஆறு
Delta — கழிமுகம் / வடிநிலம்
Strait — நீரிணை
Isthmus — நிலவிணை
Archipelago — தொகுதீவு
Island — தீவு
Sea — கடல்
Ocean — மாக்கடல் / பெருங்கடல்
Beach — கடற்கரை
Lagoon — காயல்
Cove — சிறுகுடா
Gulf — வளைகுடா
Bay — விரிகுடா
Peninsula — குடாநாடு / குடாநிலம்
Cliff — ஓங்கல்
Hill — குன்று
Mountain — மலை
Forest — காடு
Jungle — அடவி
Plateau — மேட்டுநிலம்
Canyon — ஆற்றுக்குடைவு
Valley — பள்ளத்தாக்கு
Cave — குகை
Desert — பாலை
Oasis — பாலைச்சோலை
Dune — மணற்குன்று
Mesa — மேடு
Prairie — பெருவெளி
Plain — சமவெளி
Lake — ஏரி
Pond — பொய்கை
Waterfall — அருவி
Stream — ஓடை
Geyser — ஊற்று
Canal — கால்வாய்
Swamp — சதுவல்
Marsh — சதக்கல்
Volcano — எரிமலை
Glacier — சறுக்கு பனிக்கட்டி ஆறு
Tundra — பனிவெளி
Iceberg — பனிப்பாறை
Cape — முனை
Fjord — இடுக்கேரி
Spring — ஊற்று
Hot Spring — சுடுநீர் ஊற்று

ஒரு மொழியின் தொன்மையும் செழுமையும் அதன் இலக்கியத்தில் மட்டுமல்ல; இயற்கையையும் உலகையும் நுணுக்கமாகப் பெயரிட்டு விளக்கும் அதன் சொல்வளத்திலும் வெளிப்படுகிறது.

— தோழர் முத்துகிருஷ்ணன்

@OLBNNews
Telegram post media வங்கிகள் பெயர் மாற்றம்!

இந்தியாவின் 9 தேசிய வங்கிகள் இனி பெயர் மாற்றம் செய்யப்பட்டு 3 வங்கிகளாக இணைக்கப்பட்டு செயல்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

@OLBNNews
Telegram post media 🚨 UPI-ல ₹2,000க்கு மேல Payment பண்ணினா இனிமே Charge வருமா?

October 15 முதல் UPI transactions-க்கு புதிய charges வரப்போகிறது என்ற செய்தியைப் பார்த்ததும்… “அடப்பாவிகளா… UPI-க்கும் Charge கொண்டு வந்துட்டாங்களா?” 😄 ன்னு நினைக்காதீங்க.

மேட்டர் அது இல்லை.

முதல்ல ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க.

👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge ம் கிடையாது. புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate.

அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge அ கட்ட வேண்டும். Customer அல்ல.

சரி… என்ன மாறப்போகுது?

👨‍👩‍👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா?

நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க. மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க. உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க. அதுக்கெல்லாம் Charge ₹0.

இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction. Amount எவ்வளவாக இருந்தாலும் permitted limits (ஒரு நாளைக்கு ₹1,00,000) க்குள் P2P UPI transfer தொடர்ந்து Free.

🛒 Shop / Business-க்கு Payment?

இங்கதான் மாற்றம் வருகிறது. Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4% வரும்.

உதாரணமா:

₹3,000 Payment → MDR ₹12
₹50,000 Payment → MDR ₹200

₹75,000 மற்றும் அதற்கு மேல ன்னா - Maximum MDR = ₹300.

₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது. Maximum ₹300 மட்டுமே.

ஆனா மறுபடியும் சொல்றேன்… இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை. Merchant தான் செலுத்த வேண்டும். Merchant இதை Customer மேல தனியாக UPI charge என்று போடவும் முடியாது.

🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்?

இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள்.

அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க.

அப்படி கிடையாது.

📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்?

இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு:

MDR = 0.02%
Maximum: ₹300 per transaction.

இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும்.

💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்?

இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது.

அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது.

🚆 Insurance, Fuel போன்ற Payments?

Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க.

Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல.

📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா?

இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக்கூடாது.

📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்?

இந்த புதிய MDR framework: 15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது.

🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்?

நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

Friend-க்கு Money Transfer → FREE ✅
Family-க்கு Money Transfer → FREE ✅
Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅
SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅
₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅

முக்கியமான விஷயம்…

News headline: “UPI payments above ₹2,000 will be charged.”

இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா என்னோட Account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம்.

அதுதான் இல்லை.

சரியான புரிதல்: Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது. அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார்.

அதனால் October 15க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும்போது… “ஐயையோ… Charge போயிடுமோ!”

என்று பயப்பட வேண்டாம் மக்களே!!! 😄🙏🙏🙏

ஒகேவா 👍👍👍
⚠️ இது ஒரு முன்னெச்சரிக்கை பதிவு!

@OLBNNews
Telegram post media வாக்காளர் வழிகாட்டி (Voter Vazhikatti) அறிமுகம்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி — தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்காளருக்கும் வழிகாட்ட.

👉 இங்கே பயன்படுத்திப் பாருங்கள்: votervazhikatti.tn.gov.in
👉 உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள் 👨‍👩‍👧‍👦
👉 ஏப்ரல் 23 அன்று வாக்களிக்க வாருங்கள் 🗓️

இந்த தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம் — உங்கள் கருத்துகள் அதை இன்னும் சிறப்பாக்கும். ✨

📲 பரிந்துரைகள் அல்லது உதவி வேண்டுமா?
WhatsApp-ல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: +91 73583 81950 💬

தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா!

#MyVoteMyRight #VoteForDemocracy #ivote4tn #100PercentVoting #GoVote #EveryVoteCounts #ECI #TNElections2026
Telegram post media 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 NEWS

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு! 🗳️

✦ மொத்த தொகுதிகள் – 234
✦ கட்டங்கள் – 1
✦ வாக்குப்பதிவு – 23.04.2026
✦ வாக்கு எண்ணிக்கை – 04.05.2026
✦ வேட்புமனு தொடக்கம் – 30.03.2026
✦ வேட்புமனு முடிவு – 06.04.2026

@OLBNNews
Telegram post media தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவரம்!

தமிழ்நாடு முழுவதும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive Revision - SIR) கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, வீடு பூட்டியிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மூன்று முறை தேடி வரும் அலுவலர்கள்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, வீடு பூட்டியிருந்தால், அவர் உடனடியாக உங்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட மாட்டார். மாறாக, ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அலுவலர்கள் வரும் தேதிகள், முன்கூட்டியே அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அறிவிக்கப்படும்.

என்னென்ன சவால்கள் உள்ளன?

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், பகல் நேரங்களில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால், அலுவலர்களால் உரியவர்களிடம் படிவங்களை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் அடிக்கடி வீடு மாறுவதால், அவர்களின் தற்போதைய முகவரியை கண்டறிவதும் சவாலாக உள்ளது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வரும்போது, அவரிடம் இருந்து முன்பே ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த படிவத்தில் உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, உங்கள் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
ஒருவேளை, அலுவலர் வரும்போது நீங்கள் வீட்டில் இல்லை என்றாலோ அல்லது அவரை சந்திக்க முடியவில்லை என்றாலோ, voters.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நீங்களே உங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் அதே தொகுதிக்குள் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தால், அந்த தகவலை அலுவலரிடம் தெரிவிக்கலாம். வேறு தொகுதிக்கு மாறியிருந்தால், பழைய தொகுதியில் உங்கள் பெயரை நீக்கிவிட்டு, புதிய தொகுதியில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
காலக்கெடுவை தவறவிடாதீர்கள்

டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் இந்த வீடு வீடாக சரிபார்க்கும் பணியின் போது, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஒருவேளை, இந்த படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொடுக்கத் தவறினால், டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாமல் போக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, நீங்கள் மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, உங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை சரியாக நிறைவேற்ற, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

@OLBNNews
Telegram post media இனி பயம் வேண்டாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம்.

erolls.tn.gov.in/blo என்ற இணையதளத்தில் இருந்து உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.

@OLBNNews
Telegram post media வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்.

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி' தொடர்பாக பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பழைய முகவரியிலிருந்து மாறி இருப்பவர்களின் வாக்குரிமை, அவர்கள் தற்போது வசிக்கும் முகவரிக்குத்தான் அமையும் என்றும், அவர்களின் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இருந்ததா என்பது மட்டுமே சரிபார்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, ஆதாரங்களை கணக்கெடுப்பின்போது சமர்ப்பிக்க தேவையில்லை என்றும், வரைவு பட்டியல் வெளியான பின் 13 ஆவணங்களில் ஒன்றை கொடுத்து பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பப் படிவத்தில் தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரைப்பதிவு செய்தால் மட்டுமே போதுமானது.

2024 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம்-6 மற்றும் உறுதிமொழிப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்களின் படிவங்களை அவர்களின் குடும்பத்தார் பூர்த்தி செய்து தரலாம் என்றும், விரைவில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
Telegram post media தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்

தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான elections.tn.gov.in/Electoral_Serv… க்குச் செல்லவும்.

"Special Intensive Revision - 2002/2005" என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது, "Search your name in electoral roll" (வாக்காளர் பட்டியலில் உங்க பெயரைத் தேடுங்கள்) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: தேடல் விருப்பங்கள்

உங்களுக்கு 3 தேடல் விருப்பங்கள் காட்டப்படும்:

EPIC எண் மூலம் தேடுதல் (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை)

விவரங்கள் மூலம் தேடுதல்

மொபைல் எண் மூலம் தேடுதல்

விருப்பம் 1: EPIC எண் மூலம் தேடுதல்

உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அட்டை இருந்தால், இதுவே வேகமான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும்.

உங்க EPIC எண்ணை (வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி) உள்ளிடவும்.

மாநில கீழ்தோன்றும் பட்டியலில் (dropdown list) இருந்து 'தமிழ்நாடு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்கிரீனில் தோன்றும் Captcha குறியீட்டை டைப் செய்யவும்.

"Search" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.

விருப்பம் 2: தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல்

உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், உங்க தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரைக் கண்டறியலாம்.

"Search by details" என்பதைக் கிளிக் செய்யவும்.

மாநிலம் மற்றும் மொழியை (தமிழ், ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கவும்.

பின்வரும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்:

உங்க முழுப் பெயர் (அல்லது நீங்க மற்றவருக்காகச் சரிபார்த்தால் அவர்களின் பெயர்)

பிறந்த தேதி (உங்க அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி)

பாலினம்

மாவட்டம் மற்றும் தொகுதி

Captcha குறியீட்டை நிரப்பி, "Search" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.

விருப்பம் 3: மொபைல் எண் மூலம் தேடுதல்

உங்க வாக்காளர் பதிவு ஆவணத்துடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், இது மற்றொரு வசதியான வழியாகும்.

"Search by Mobile" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.

Captcha குறியீட்டை நிரப்பி, "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க போனுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.

அந்த OTP எண்ணை உள்ளிட்டு, "Search" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்க வாக்காளர் தகவல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உங்க வாக்காளர் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் அவசியம். விடுபட்ட பெயர்கள், தவறான விவரங்கள், அல்லது காலாவதியான முகவரிகள் உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்கக்கூடும். இந்த 'சிறப்பு தீவிர திருத்தப் பணி' (SIR), தகுதியான ஒவ்வொரு வாக்காளரும் பட்டியலில் தங்கள் சரியான இடத்தைப் பெறுவதை உறுதிசெய்து, இதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

@OLBNNews
வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்வது எப்படி?

Website : voters.eci.gov.in/Homepage
Telegram post media வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்

Website : voters.eci.gov.in/Homepage
Telegram Channel Link information
Country 🇮🇳 India
Language Tamil
Type Telegram Channel Link
Subscribers 864
Rate this group

How would you rate this community?

0.0 ★ Join Group →