Telegram
Telegram Channel Link
தினசரி தமிழ் செய்திகள் - Daily Tamil News Telegram Channel Link
👁
4
views
↗
1
joins
About this telegram channel link
பல்சுவை தகவல்களை பெற : www.palsuvai.in App link : https://play.google.com/store/apps/details?id=com.bs.palsuvai
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
92
subscribers
12 Jul 2022
latest post
The account of the user that owns this channel has been inactive for the last 11 months. If it remains inactive in the next 7 days, that account will self-destruct and this channel may no longer have an owner.
பிரதமர் கிசான் திட்ட நிதி மோசடி; விழுப்புரம் மாவட்டத்தில் 11,200 பேரிடம் ரூ.4.48 கோடி பறிமுதல்: பெரம்பலூர் மாவட்டத்தில் 1,700 பேர் முறைகேடுவிழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட மோசடியில் 11,200 போலி பயனாளிகளிடம் இருந்து ரூ.4.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கணக்கில் அந்த நிதி சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 1,700 பேர், ரூ.68 லட்சம் வரை முறைகேடாக நிதி உதவி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வரவு வைக்கப்படும். இடையில் இத்திட்டத்தில் ஆன்லைன் மூலமும் பயனாளிகள் சேரலாம் என்று தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத பலர் இத்திட்டத்தில் இணைந்து மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மோசடியில் ஈடுபட்ட 2 வட்டார வேளாண் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் மீதான வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, போலி பயனாளிகள் பெற்றத் தொகையை, அந்தந்த வங்கிகள் மூலம் திரும்ப பெற்று அரசின் கணக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், கிசான் நிதியுதவித் திட்டத்தில் 42 ஆயிரம் போலி பயனாளிகள் சேர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 42 ஆயிரம் பேரில், இதுவரை 11,200 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் திரும்ப எடுக்கப்பட்டு, அந்த தொகை அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறாக போலி பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்ட நடவடிக்கைஇந்த மோசடி சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து பலர் தாமாகவே வட்டார வேளாண் மையங்களை அணுகி தங்கள் பணத்தை திரும்ப வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். அப்படி செலுத்தாதவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில்..இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து வேளாண்மைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 1,700 பேர், 2 தவணைகளில் ரூ.68 லட்சம் முறைகேடாக நிதி உதவி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.பொய்யான தகவல் அளித்து முறைகேடாக நிதி உதவி பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுட்டுள்ளனர். மேலும், முறைகேடாக நிதி உதவி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் அதிலிருந்து அரசிடம் பெற்ற நிதியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுவரை ரூ.11 லட்சம் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
கரோனாவிலிருந்து 22 லட்சம் பேர் குணமடைந்தனர்: தொற்று 30 லட்சத்தை நெருங்குகிறது; ஒரே நாளில் 10 லட்சம் பரிசோதனை செய்து மைல்கல் இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 69 ஆயிரத்து 874 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 29 லட்சத்து 75 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நிலையில், நாளையுடன் 16 நாட்களில் அடுத்த 10 லட்சத்தை எட்ட உள்ளது. இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 22 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 74.69 ஆக உயர்ந்துள்ளது.தற்போது நாட்டில் கரோனாவுக்காக 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருவோர் 23.43 சதவீதமாக இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 55 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.87 சதவீதமாகக் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 339 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 101 பேரும், கர்நாடகாவில் 93 பேரும், ஆந்திராவில் 91 பேரும் உயிரிழந்தனர்.உத்தரப் பிரதேசத்தில் 64 பேர், மேற்கு வங்கத்தில் 55 பேர், பஞ்சாப்பில் 34 பேர், ஜம்மு காஷ்மீரில் 15 பேர், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தலா 14 பேர், டெல்லியில் 13 பேர், கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தானில் தலா 12 பேர், ஜார்க்கண்டில் 11 பேர் கரோனாவில் உயிரிழந்தனர்.ஒடிசாவில் 10 பேர், கோவாவில் 9 பேர், ஹரியாணா, தெலங்கானாவில் தலா 7 பேர், அசாம், பிஹார், புதுச்சேரியில் தலா 6 பேர், உத்தரகாண்டில் 5 பேர், சண்டிகரில் 2 பேர், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், அந்தமான் நிகோபர், லடாக், திரிபுராவில் தலா ஒருவர் உயிரிழந்தனர். ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 லட்சத்து 23 ஆயிரத்து 836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.இதுவரை 10 லட்சம் மாதிரிகள் ஒரேநாளில் பரிசோதிக்கப்படவில்லை. இதை இலக்காக வைத்துதான் ஐசிஎம்ஆர் செயல்பட்டு வந்தது. ஒட்டுமொத்தமாக 3 கோடியே 44 லட்சத்து 91 ஆயிர்தது 73 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 339 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 879 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 101 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெல்லியில் 11 ஆயிரத்து 426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,270 ஆக அதிகரித்துள்ளது.குஜராத்தில் 14 ஆயிரத்து 177 பேர் சிகிச்சையில் உள்ளனர். 14 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 83,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 93 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,522 ஆக அதிகரித்துள்ளது.கேரள மாநிலத்தில் 18,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடங்கியது; கரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்: வழக்கமான உற்சாகம் இல்லைமகாராஷ்டிர மாநிலத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று தொடங்கியது. கரோனா வைரஸ் பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கமாகக் காணப்படும் உற்சாகம் இந்த ஆண்டு இல்லை.கரோனா வைரஸ் பரவலால் கடும் கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் அறிவித்துள்ள மகாராஷ்டிர அரசு 2 அடி முதல் 4 அடிக்குள்ளாகவே விநாயகர் சிலையை வைக்க வேண்டும், விநாயகர் சிலையைக் கரைக்கும் ஊர்வலம் கிடையாது என்று தெரிவித்திருந்தது. இதனால், அனைத்து சமூகத்தினர் சார்பில் மும்பையில் வைக்கப்படும் விநாயகர் சிலையின் உயரம் 4 அடி உயரத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் உற்சாகத்தை மக்கள் குறைத்துக்கொள்ள மனமில்லை. மும்பை தாதர், சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் இன்று காலை முதலே மக்கள் வந்து, வீட்டில் வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலையை வாங்கிச் சென்றனர். ஆனால், வழக்கமான கூட்டம் இல்லை.டெல்லி துவாரகாவில் உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை நடந்த காட்சி.கரோனா வைரஸ் பரவலால், கூட்டம் காரணமாக பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் பூக்கள் வியாபாரம், இனிப்பு பலகாரங்கள் வியாபாரம், அலங்காரப் பொருட்கள், பூஜைப் பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரம் மிகவும் மந்தமாகவே காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விநாயகர் சிலை செய்யும் தொழில்களும், கைவினைக் கலைஞர்களின் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்னன. மும்பையில் மிகவும் புகழ்பெற்ற லால்பாகுஜா ராஜா சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலை இந்த முறை கரோனா வைரஸால் வைக்கப்படவில்லை. மும்பையில் மிகவும் பணக்கார சமூகமாகக் கருதப்படும் வதாலா ஜிஎஸ்பி சேவா சமிதி சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலையும் வைக்கப்படவில்லை.விநாயகர் சதுர்த்தியன்று நடத்தப்படும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு கரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வழக்கமாக இருக்கும் அலங்காரம், தோரணங்கள், பூக்கள் அலங்காரம் ஆகியவை விநாயகருக்கு இந்த முறை இல்லை.நாக்பூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட காட்சி.மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளன. மும்பையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விநாயகர் சிலைகளையும், வழிபாட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். மும்பை நகரின் சில இடங்களில் பட்டாசு வெடித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.முதல்வர் உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை இன்று காலை வைத்து வழிபட்டார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.மும்பையில் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கொண்டாடப்படுவதையொட்டி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிவிரைவுப் படை, 3 கம்பெனி ரிசர்வ் போலஸார், ஆயுதப்படை, கலவரம் கட்டுப்படுத்தும் படை, வெடிகுண்டு செயலிழக்கும் படை, தீவிரவாத தடுப்புப் படை ஆகியவை இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையில் கண்காணிப்புக்காக 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அரசியல் பகையாக மாறும் லாலு குடும்ப மோதல்: பிஹார் தேர்தலில் கணவர் தேஜ் பிரதாப்பை எதிர்க்கும் ஐஸ்வர்யா ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் குடும்ப மோதல், அரசியல் பகையாக மாறிவிடும் போல் உள்ளது. லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை எதிர்த்து அவரது மனைவியான ஐஸ்வர்யா ராய் பிஹார் தேர்தலில் போட்டியிட உள்ளார்.தேஜ் பிரதாப்பிற்கு முன்னாள் எம்எல்ஏவான சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாராயுடன் கடந்த ஏப்ரல் 18, 2018இல் திருமணம் நடைபெற்றது. அடுத்த ஐந்து மாதங்களில் மோதலுக்குள்ளான தம்பதிகள் விவாகரத்து கேட்டு பாட்னா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கணவர் தேஜ், மாமியார் ராப்ரி தேவி, நாத்தனார் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது குடும்ப வன்கொடுமை வழக்கையும் ஐஸ்வர்யா ராய் பதிவு செய்துள்ளார். லாலு குடும்பத்தில் உருவான மோதல், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்பப் பகையாக மாறிக் கொண்டிருக்கிறது.ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த சந்திரிகா ராய், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியில் இணைந்துள்ளார். இதனால், தனது மகள் ஐஸ்வார்யாவையும் கட்சியில் சேர்த்து அவரை பிஹார் தேர்தலில் போட்டியிட வைக்க உள்ளார் சந்திரிகா ராய். இதில், தம் கணவர் தேஜ் பிரதாப்பை எதிர்த்து ஐஸ்வர்யா ராய் மஹுவா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இவர், தேஜின் இளைய சகோதரரான தேஜஸ்வீ பிரசாத் யாதவையும் எதிர்த்து இரண்டாவது தொகுதியாக ரகோபூரில் ஐஸ்வர்யா போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.இதனால், லாலு குடும்பத்தின் மோதல் அரசியல் மோதலாக உருவெடுத்துவிட்டது. இதை ஏற்கெனவே எதிர்பார்த்த தேஜஸ்வீ, ஐஸ்வர்யா ராயின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான டாக்டர் கரிஷ்மா ராயை கடந்த மாதம் தன் கட்சியில் சேர்த்திருந்தார்.ஐஸ்வர்யா ராயை எதிர்த்து கரிஷ்மாவை போட்டியிட வைக்கவும் தேஜஸ்வீ திட்டமிட்டுள்ளார். இந்த மோதலை அரசியல் லாபமாக்கும் ஆளும் கூட்டணிக் கட்சியான ஜேடியூ, தம் குடும்பத்தையே சமாளிக்க முடியாத லாலுவா பிஹாரை சமாளிக்கப் போகிறார்? எனக் கேள்வி எழுப்ப பிரச்சாரம் செய்யத் தயாராகிறது. இந்நிலையில், லாலு தலைமையிலான மெகா கூட்டணியின் தலித் ஆதரவுத் தலைவரான ஜிதன்ராம் மாஞ்சி தம் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். இதில், தமக்குக் கூடுதலான தொகுதிகள் ஒதுக்காவிடில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு தாவி விடுவதாக மிரட்டுவது தொடர்கிறது.இதனிடையே, மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கவும் ஆலோசித்து வருகிறது. இதனால், சிறையில் இருக்கும் லாலுவிற்கு ஓரிரு மாதங்களில் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிக்க விடுக்கப்பட்ட டெண்டர் ரத்து: சீன நிறுவனம் முக்கிய போட்டியாளராகப் பங்கேற்றதால் ரயில்வே அதிரடி முடிவு44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில்களை தயாரிக்க கடந்த ஆண்டு விடுக்கப்பட்ட டெண்டரில் முக்கியப் போட்டியாளராக சீனாவைச் சேர்ந்த நிறுவனம் பங்கேற்றதால், டெண்டரை அதிரடியாக ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான எந்தவிதமான காரணத்தையும் ரயில்வே துறை தெரிவிக்கவில்லை. 16 பெட்டிகள் கொண்ட 44 வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிக்க கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி சென்னை ஐசிஎப் சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டது.இதில் குருகிராம் நகரைச் சேர்ந்த பயோனீர் பில் நிறுவனத்துடன் இணைந்து சீனாவைச் சேர்ந்த சிஆர்ஆர்சி யாங்ஜி எலெக்ட்ரிக் கம்பெனி லிமிட் உள்பட 6 நிறுவனங்கள் பங்கேற்றிருந்ததன. மேலும், பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், சாங்ரூர், எலெக்ட்ரோவேவ்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட், மேதா சர்வோ டிரைவஸ் பிரைவேட் லிமிட், பவர்நெட்டிக்ஸ் எக்குயிப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிட் ஆகிய உள்நாட்டு நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்றன.இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் நேற்று இரவு ட்விட்டரில் பதிவிடப்பட்ட செய்தியில் “ 44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிக்க விடுக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து திருத்தப்பட்ட கொள்முதல் விதிகள்படி அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய டெண்டர் விடுக்கப்படும்”எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை அதிகாரபூர்வமாக ரயில்வே தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த வந்தபாரத் ரயில்கள் அனைத்தையும் மேக் இன் இந்தியா திட்டத்தில் செயல்படுத்த முடிவு செய்திருப்பதால், வெளிநாட்டு நிறுவனம் (சீன நிறுவனம்) டெண்டரில் பங்கேற்பதை அரசு விரும்பவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனா ராணுவத்துக்கு இடையே கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப்பின் சீனாவுக்கு மறைமுகமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.டிக்டாக் உள்ளிட்ட 105 சீன செல்போன் செயலிகளை இந்தியாவில் தடை செய்து மத்தியஅரசு உத்தரவிட்டது. ரயில்வே துறையில் தெர்மல் கேமிரா வழங்க சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. ரூ.470 கோடி மதிப்பில் சரக்குப் போக்குவரத்துக்காக சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே அனைத்து இந்தியவர்த்தகர்கள் கூட்டமைப்பு சமீபத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் 44 வந்தே பாரத் ரயில்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.பிரதமர் மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி புதுடெல்லி, வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைத்தார். புதுடெல்லி, ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி இடையே 2-வது ரயிலை கடந்த 2019, அக்டோபர் 3-ம்தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசோக் லவாசாவுக்கு பதிலாக, தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் நியமனம் ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதால், பதவியை ராஜினாமா செய்த அசோக் லவாசின் இடத்துக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் நிதித்துறை செயலாளருமான ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை அவரின் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் பதவிக்காலம் வரும் 31-ம் தேதி வரை இருப்பதால், அவர் அந்த பதவியில் தொடரலாம். இந்த நிலையில் அசோக் லவாசாவின் இடத்துக்கு முன்னாள் நிதித்துறைச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ராஜீவ் குமார் பதவியில் சேர்வதிலிருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும். கடந்த 1984-ம் ஆண்டு ஜார்கண்ட் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக பதவி ஏற்பது இதுதான் முதல்முறையாகும். இந்த பதவியில் 5 ஆண்டுகள்வரை ராஜீவ் குமார் இருப்பார், அதாவது 2025ம் ஆண்டுவரை தொடர்வார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தபின் ராஜீவ் குமார் பதவியில் இருப்பார். பொதுவாக தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரையாகும். இதில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுக்கப்படும். தற்போது ராஜீவ் குமாருக்கு 60 வயதாகிறது.இதுதொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை நேற்று இரவு விடுத்த அறிவிக்கையில் “ அரசியலமைப்புச்சட்டம் 324பிரிவின்படி, தேர்தல் ஆணையர் பதிவியிலிருந்து ராஜினாமா செய்த அசோக் லவாசா பதவிக்காலம் வரும் 31-ம் தேதி முடிந்தபின் புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் நிதித்துறை செயலாளரான ராஜீவ் குமார் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இந்த பதவியில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நியமிக்கப்பட்டார், 2023, ஏப்ரல் 28வரை தொடர வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது கடந்த 2017 செப்டம்ப1 முதல் 2020, பிப்ரவரி 29ம் தேதி வரை மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் செயல்பட்டார்.கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களில் ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார்.நிதித்துறையில் ராஜீவ் குமார் இருந்தபோது முக்கிய வங்கிச்சீர்திருத்தங்கள், நிர்வாக நடமுறைகளை அறிமுகம் செய்தார். கடந்த 2017-ம் ஆண்டு நிதித்துறை செயலாளராக ராஜீவ் குமார் பதவி ஏற்றபோது, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின. அதன்பின் வங்கிக்கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்கள் செய்து, 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ராஜீவ்குமார்தான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ராஜீவ் குமார் இரண்டரை ஆண்டுகளாக இருந்தவரை நிதித்துறை, வங்கி்த்துறையில் பல்ேவறு புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, வங்கிகளுக்கு புதிதாக பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு பொறுப்புள்ளதாக மாற்றப்பட்டது. ஏறக்குறைய ரூ. 3 லட்சம் கோடி வங்கிகளுக்கு மறுமுதலீடு ராஜீவ் குமார் காலத்தில் வங்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
பிரணாபுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேலும், அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. அவரது ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு உள்ளிட்டவை சீராக உள்ளன. அவரை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் அதிகாலை ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் விபத்து: 9 பொறியாளர்கள் உயிரிழப்பு; குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டு அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நேரிட்ட தீ விபத்தில் 9 பொறியாளர்கள் உயிரிழந்தனர்.ஸ்ரீசைலம் அணைக்கட்டின் தெலங்கானா பிரிவில் இடது கரை கால்வாயில் நீர்மின் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் பேனல் போர்டு பகுதியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு புகை சூழ்ந்தது. அந்த நேரத்தில் சுமார் 30 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதை வழியாக உடனடியாக அங்கிருந்த பொறியாளர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் தீ வேகமாக பரவியது. இதனிடையே, சுமார் 15 ஊழியர்கள் சுரங்கப்பாதை வழியாக சிறு காயங்களுடன் வெளியே ஓடி வந்து தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் 6 பேரை உயிருடன் மீட்டனர்.இந்நிலையில், அங்கு பணிபுரிந்த 9 பொறியாளர்கள் நீர்மின் நிலையத்துக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டனர். புகை மூட்டம் காரணமாக தீயணைப்புப் படையினரால் உள்ளே செல்ல முடியவில்லை. இந்த சூழலில், நேற்று அதிகாலை முதல் மீண்டும் மீட்புப் பணிகள் தொடர்ந்தது. அப்போது, உதவிப் பொறியாளர் சுதாகரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து, உதவி பொறியாளர்கள் மோகன் குமார் , உஜ்மா பாத்திமா உட்பட 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களின் உடல்கள் மகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சிஐடி விசாரணைதெலங்கானா மின்வாரியத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, டிரான்ஸ்கோ ஜென்கோ நிர்வாக இயக்குநர் பிரபாகர் ராவ், எம்எல்ஏ குவ்வல பால்ராஜு, நாகர் கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஷர்மன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திலிருந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிஐடி கூடுதல் டிஜி கோவிந்த் சிங்குக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.இந்த விபத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்ரீசைலம் நீர்மின் நிலைய தீ விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்தின் பராமரிப்புக்கு அளித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குதிருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்துக்கு ஏலத்தில் மத்திய அரசு அளித்த முடிவை செயல்படுத்த , தடைவிதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கெனவே அதானி குழுமம், லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமானநிலையங்களை கடந்த 2019-ம் ஆண்டு முதல் பராமரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 விமான நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன.திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், கேரள அரசு சார்பில் நேற்றுமுன்தினம் திடீரென அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜக மட்டும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அதானி குழுமம் அளித்துள்ள அதே விலையை கேரள அரசும் தயாராக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கேரள அரசு சட்டரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். வரும் 24-ம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது. இது தவிர 2-வது முறையாக பிரதமர் மோடிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி, திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரினார்.இந்த சூழலில் கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில், திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயாக்கும் முடிவுக்கும், அடுத்த கட்ட நடிவடிக்கைகளை எடுக்கவும் தடைவிதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், " திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயாக்கும் முடிவுக்கும், அடுத்த கட்ட நடிவடிக்கைகளை எடுக்கவும் தடைவிதிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஈடுசெய்ய முடியாத சேதத்தையும், கஷ்டத்தையும் கொடுத்துவிடும். விமாநிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும் ஏற்கெனவே ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் தனியார்மயாக்கும் முடிவை செயல்படுத்தும் முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும்" எனவும் தெரிவி்க்கப்பட்டது.தனியாருக்கு விமானநிலையங்களை ஒப்படைப்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கடந்த ஆண்டு கேரள அரசு இதேபோன்று மனுத்தாக்கல் செய்தது. ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டம் 226-ன்படி இந்த மனுவை விசாரிக்க முடியாது எனத் தள்ளுபடி செய்தது.இதைத்தொடர்ந்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரி்த்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து, விசாரணைக்கு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தியை வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்: ஆந்திர அமைச்சர் வேண்டுகோள்ஆந்திர மாநில இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் வெள்ளம்பல்லி ஸ்ரீநிவாஸ் நேற்றுதனது குடும்பத்தினருடன் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்த தேவஸ்தான அதிகாரிகள், தரிசன ஏற்பாடுகள் செய்தனர். பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் அமைச்சருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.அதன் பின்னர் அமைச்சர் வெள்ளம்பல்லி ஸ்ரீநிவாஸ் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருமலையில் கரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள்அறிவித்த நிபந்தனைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன. இதற்காக நான் தேவஸ்தான அதிகாரிகளை பாராட்டுகிறேன். விநாயகர் சதுர்த்தியை இம்முறை நாம் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தெருக்களில் விதவிதமான விநாயகர் சிலை வைத்து வழிபடுவோம். கரோனா தொற்று பரவலை தடுக்க இம்முறை தெருவில் வைக்கும் விநாயகர் சிலைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இதனையும் எதிர்க்கட்சியினர் அரசியலாக்குகின்றனர்" என்றார்.
ஊரடங்கால் வேலை இழந்தோருக்கு 50% ஊதியம்: இஎஸ்ஐ மூலம் 3 மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவுகரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பணியாளர்களுக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் (இஎஸ்ஐ) மூலம் அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகையை 3 மாதங்களுக்கு வழங்குவதற்கு வகைசெய்யும் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த அல்லது வேலை நிச்சயமற்ற சூழலில் உள்ள பணியாளர்களுக்கு இப்புதிய விதிமுறை மூலம் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவர் என்று தெரிகிறது. ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சலுகையை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வந்தனர். இரண்டு மாதங்களுக்கு அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பான நிதி ஆயோக்கும் விதிமுறைகளை தளர்த்துமாறு அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் இஎஸ்ஐ பங்களிப்பை செலுத்திய நிறுவனங்களில் பணிபுரியும்ஊழியர்களுக்கு இந்த அலவன்ஸ் தொகை கிடைக்கும். மார்ச் 24 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையான காலத்துக்காக இந்த அலவன்ஸை பெறலாம். ஊழியர்கள் இஎஸ்ஐ உறுப்பினர்களாக 2 ஆண்டுகள் இருந்திருக்கவேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரை அவர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர்பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். இந்த நடவடிக்கை மூலம் 30 லட்சம் முதல் 35 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என்று பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய செயல் உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடல் பிமிட் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமும் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்படி ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை அவர்களது முந்தைய இஎஸ்ஐ பங்களிப்பில் நான்கு தவணைகளின் அடிப்படையில் பெற முடியும். பணிக்காலத்தில் ஒரு முறை இத்தகைய வேலையின்மை கால அலவன்ஸை 90 நாட்களுக்குப் பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவானது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நிவாரணம் கோரும் காலத்தில் அவர்கள் வேலையிழந்தவராக இருக்க வேண்டும். காப்பீடு கோரும் வகையிலான பணியில் அவர்கள் 2ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.இந்த திட்டத்தில் நிவாரணம் கோரும் கால அவகாசத்தை இஎஸ்ஐசி ஜூன் 30, 2021 வரை நீட்டித்துள்ளது. இந்த முடிவானது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
கரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடிடெல்லியில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த துப்புரவுப் பணியாளரின் குடும்பத்துக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ரூ.1 கோடி இழப்பீடு வழங்கினார்.டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 4 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். கரோனாவுக்கு எதி ரான போரில் முன்களப் பணி யாற்றி வரும் துப்புரவுப் பணி யாளர்களும் தொற்று பாதிப் புக்கு ஆளாகின்றனர். டெல்லி யில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு டெல்லி மஞ்சு-கா-டில்லா பகுதி யில் கரோனா தொற்றால் உயி ரிழந்த துப்புரவுப் பணியாளர் ராஜுவின் வீட்டுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று சென்றார். ராஜுவின் குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.1 கோடிக்கான காசோ லையை வழங்கினார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஒடிசாவில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், ஹரியாணா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும் மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை கனமழையும் பெய்தது.29 இடங்களில் பிஹார் 16, அஸ்ஸாம் 4, உத்திர பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் ஒன்று, ஜார்கண்டு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்) ஆகியவற்றில் கடுமையான வெள்ள நிலைமைகளும், 30 இடங்களில் (பீகார் 9, அஸ்ஸாம் 6, உத்திரபிரதேசத்தில் 6, தெலங்கானாவில் 3, ஆந்திராவில் 2 மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் 1) அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர்ப் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்தப் பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. 41 வெள்ளத் தடுப்பணைகள் மற்றும் அணைகளுக்கு (கர்நாடகாவில் 13, மத்தியப்பிரதேசம் மற்றும் ஆந்திராவில் தலா 5, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஜார்கண்டில் தலா 3 மற்றும் சத்தீஸ்கர், குஜராத் மற்றும் ஒடிசாவில் தலா 1) வெள்ள நீர்வரத்து குறித்த முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவின் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 20ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆகஸ்ட் 20 முதல் 21, 2020 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வுமத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. சிறப்புப் பிரிவில் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் இருவர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும்.ஆசிரியர்கள் திலிப் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் இந்து தமிழ் நாளிதழின் அன்பாசிரியர் விருதுகளை அண்மையில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கரோனா காலத்தில் தேர்தல் நடத்தும் வழிகாட்டி நடைமுறைகள்: தேர்தல் ஆணையம் வெளியீடுகோவிட்-19 காலகட்டத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத்தேர்தல் / இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வழிகாட்டி நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன: வேட்பாளரோடு செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவின் போது அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது. வேட்புமனுவையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் ஆன்லைனிலேயே பூர்த்தி செய்த பிறகு பூர்த்தி செய்தவற்றைப் பிரிண்ட் எடுத்து சம்பந்தப்பட்ட ஆர்.ஓ-விடம் சமர்ப்பிக்கும் வாய்ப்பை ஆணையம் உருவாக்கியுள்ளது. முதல் முறையாக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெப்பாசிட் காப்புத்தொகையை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையமானது வேட்பாளருடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு அவருடன் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் / மாநிலம் ஆகியவை வழங்கியுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த வழிகாட்டுதலின் படி பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். தேர்தலின் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு முகக்கவசம், கிருமிநாசினி, தெர்மல் வெப்பமானி, கையுறைகள், முகக்கவசம், முழு உடல் கவசம் ஆகியன பயன்படுத்தப்பட வேண்டும். வாக்காளர் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்கும் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவதற்கும் வாக்காளர்களுக்குக் கையுறைகள் வழங்கப்பட வேண்டும்.சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உள்ளூர் நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டும் இந்த வழிகாட்டி நெறிமுறைகளின் படியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாநிலம் / மாவட்டம், ஏசி தேர்தல் செயல் திட்டங்களை விரிவாகத் தயாரிக்க வேண்டும். இந்தச் செயல்திட்டங்களைசம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கோவிட்-19க்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துத் தயாரிக்கவேண்டும்.
கரோனா பரவல்; கட்டுப்பாட்டுடன் விநாயகர் சதுர்த்தி- கொண்டாட்டத்தை குறைத்துக் கொள்வோம்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி; புனிதமான ‘’கணேஷ் சதுர்த்தி’’’யை முன்னிட்டு நமது நாட்டு மக்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடவுளர்கள் சிவபெருமான், பார்வதி ஆகியோரின் இளைய மகன் என்ற நம்பிக்கைக்கு உகந்த கணேச பகவான், ஞானம், முன்னேற்றம், நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார். நாம் கணேச பகவானை வழிபட்டு, புதியவற்றைத் தொடங்குவதற்கு முன்பாக அதில் இருக்கும் தடங்கல்களை அகற்றி அருளாசி வழங்குமாறு கேட்டுக்கொள்வோம். கணேச சதுர்த்தி என்பது பகவான் கணேசரின் பிறப்பைக் குறிக்கும் 10 நாள் பண்டிகையாகும். இந்த விழாக்கள் பக்தர்களின் கூட்டம் மற்றும் ஊர்வலங்களால் களைகட்டிக் காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகரின் பல்வேறு விதமான அழகிய சிலைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு வந்து வைத்து, பக்தி சிரத்தையுடன் வழிபடுவார்கள். 10-வது நாளில் கணேசர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். கணேசர் கைலாயத்துக்கு பயணம் செல்வதை இது குறிக்கும். இத்துடன் இந்த விழா நிறைவு பெறும்.பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் விநாயகர் சதுர்த்தி விழாவின் அடையாளமாக இருந்த போதிலும், இந்த ஆண்டு, கோவிட்-19 பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். கோவிட்-19 சமூக இடைவெளியையும், விதிமுறைகளையும்பின்பற்றி, விழாவைக் கொண்டாடும் வேளையில், சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்போம் என எனது சக குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.இந்த விநாயகர் சதுர்த்தி விழா, நம் நாட்டில் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றத்தை அளிப்பதாகுக.’’ எனக் கூறியுள்ளார்.
கரோனா; சிகிச்சை தேவைப்படுபவர் விகிதம் குறைவு, குணமடைபவர் விகிதம் அதிகரிப்புஇந்தியாவில் ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சத்தைக் கடந்து மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62,282 பேர் குணமடைந்துள்ளனர்இந்தியாவில், ஒரே நாளில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62,282 பேர் குணமடைந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைந்து, மருத்துவமனயிலிருந்து வீடு திரும்புவதாலும், குறைவான மற்றும் மிதமான தொற்றுப் பாதிப்புள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இன்று 21.5 லட்சத்தைக் கடந்துள்ளது (21,58,946). கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் இடையிலான இடைவெளி இன்று 14,66,918-ஐ எட்டியுள்ளது.இந்தியாவின் குணமடையும் விகிதமானது, கணிசமாக உயர்ந்து 74 விழுக்காட்டைக் (74.28 சதம்) கடந்துள்ளது. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடையும் விகிதம் 50 விழுக்காட்டுக்கும் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 23.82 சதவிகிதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களின் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவசர சிகிச்சை வசதி, ஆம்புலன்ஸ் வசதி, ஆக்சிஜன் உதவி போன்ற பல்வேறு வசதிகளால் கொவிட்-19 தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம், உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்த விகிதம் தற்போது 1.89 விழுக்காடு மட்டுமே.கடந்த 24 மணி நேரத்தில், 8,05,985 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,34,67,237 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.தற்போதைய நிலவரப்படி, கொவிட்-19 மாதிரிகள் பரிசோதிக்கப்படும் அரசு ஆய்வகங்கள் 978, தனியார் ஆய்வகங்கள் 526 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1504 ஆகும். இதன் விவரங்கள்: · ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 772 (அரசு: 453 + தனியார்: 319)· ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 614 (அரசு: 491 + தனியார்: 123)· சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 118 (அரசு: 34 + தனியார்: 84)
விநாயகர் சதுர்த்தி;நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்துவிநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.“விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விநாயகர் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திப் பண்டிகை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.தற்போது கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்கிறோம். இந்தத் தொற்றுநோயை விரைவாக சமாளித்து நாம் அனைவரும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, விநாயகர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்.”, என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
திருச்சி மாநகராட்சியில் இறைச்சிக் கடைகள் நாளை செயல்பட தடை ஏதும் இல்லை; எதிர்ப்பு காரணமாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்புதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆக.22-ம் தேதி திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான ஆடு, மாடு, வதைக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் செயல்படக் கூடாது என்றும், இந்த அறிவிப்பை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆக.18-ம் தேதி மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நேற்று (ஆக.20) வெளியானது. இந்த உத்தரவுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதைத்தொடர்ந்து, இன்று (ஆக.21) காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜவாஹிருல்லா தரப்பைச் சேர்ந்த தமுமுக- மமக சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அதில், "தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் திருச்சி மாநகராட்சியில் மட்டும் விநாயகர் சதுர்த்தி நாளில் இறைச்சிக் கடைகளை அடைக்குமாறு உத்தரவு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு இதேபோல் உத்தரவு வெளியிடப்பட்டு, பின்னர் மக்கள் கோரிக்கையை ஏற்று திரும்பப் பெறப்பட்டது. எனவே, நிகழாண்டு பிறப்பித்துள்ள உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஹைதர் அலி தரப்பைச் சேர்ந்த தமுமுகவைச் சேர்ந்தவர்கள் இன்று மாலை திரண்டனர். அலுவலகத்தின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, உள்ளே சென்ற ஓரிருவரையும் வெளியேற்றி வாயில் கதவைத் தாழிட்டனர். இதனால், தமுமுகவினர், இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.22) இறைச்சிக் கடைகள் இயங்க தடை ஏதுமில்லை என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
Telegram Channel Link information