Telegram
Telegram Channel Link
TAMIL NEWS (தமிழ் நியூஸ் ) Telegram Channel Link
👁
5
views
↗
0
joins
About this telegram channel link
இன்டர்நெட் இல்லாமலே செய்திகள் படிக்கலாம்
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
9
subscribers
04 Sep 2026
latest post
குஜராத்தில் இந்த சமூகங்கள் ஆகஸ்ட் 31-ஐ இரண்டாவது சுதந்திர தினமாக கொண்டாடுவது ஏன்? 'குற்ற பரம்பரை' என பட்டியலிடப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சமூகங்களின் நிலை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
நேபாளத்தில் மீண்டும் வெள்ள ஆபத்து: பனிப்பாறை ஏரி உடைய வாய்ப்புள்ளதால் மீட்புப் பணியாளர்களுக்கு சிக்கல் சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது 'லாக் டோ' தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இது உடையக்கூடும் என்பதால் நேபாளத்தில் மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சப்படுகிறது. 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஸ்ரீரங்கம் கோயில் தொடர்புடைய நிலத்தை விற்க முயற்சியா? உயர் நீதிமன்றம் தடை - ஜி ஸ்கொயர் நிறுவனர் விளக்கம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட நான்கு கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. இதுகுறித்து 'ஜி ஸ்கொயர்' நிறுவனர் பாலா ராமஜெயம் என்ன சொல்கிறார்? 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'அது ஒரு ரகசியம், ராணுவ ரகசியம்' - பிரிட்டனுக்கு ரஷ்ய அதிபர் புதின் மறைமுக மிரட்டல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், யுக்ரேனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலடியாக பிரிட்டனில் உள்ள ராணுவத் தளங்கள் மீது மாஸ்கோ தாக்குதல் நடத்தக்கூடுமா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒரே ஒரு சிறிய வாக்கியத்தில் பதிலளித்தார். "அது ஒரு ரகசியம். ராணுவ ரகசியம்."📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஏஐ ரோபோக்கள் கற்றுக் கொள்ள தரவு தரும் கரூர் பெண்கள் கரூரில் இயங்கிவரும் ஏஐ டேட்டா நிறுவனம் ஒன்று, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மனித உருவ ரோபோக்களுக்கு தேவையான மிகப்பெரும் தரவுகளை மனிதர்கள் மூலம் வழங்கி வருகிறது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
நேபாளத்தில் நம்பிக்கை கீற்று: சுரங்கத்திற்குள் 9 நாளாக சிக்கியிருந்த 2 பேர் உயிருடன் மீட்பு "நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதைக்குள்ளிருந்து மக்களின் குரல்கள் கேட்பதாக வரும் தகவல் ஒரு நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது." 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'4 நிமிட அவகாசம் போதாத போது': ரஷ்யாவின் புதிய தாக்குதல் உத்தியால் நிலைகுலைந்த 'கீவ்' "நீங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் இன்னொரு எச்சரிக்கை வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவற்றை மீண்டும் சுடுகிறார்கள். இது முழு இரவிலும் தொடர்கிறது. மக்கள் தூங்கமாட்டார்கள். பின்னர் ஜாம்பிகளைப் போல நடமாடுவார்கள்."📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'வரலாற்றிலேயே மிகப் பெரியது' - வெனிசுவேலாவுடன் டிரம்ப் அறிவித்த எண்ணெய் ஒப்பந்தத்தில் என்ன சர்ச்சை? சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வெனிசுலா உடனான எண்ணெய் ஒப்பந்தம், அந்த நாடு தொடர்பாக அமெரிக்க அதிபர் மேற்கொண்டுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
நேபாளம்: கோல்டிலாக்ஸ் மண்டலம் என்றால் என்ன? சுரங்கப் பாதை மீட்புப் பணியில் அது ஏன் முக்கியம்? நேபாள அரசாங்கத்திற்கு மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வரும் சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்சு,மீட்புக் குழுவினர் இதுவரை சுரங்கப்பாதையில் 60 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்னும் 150 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினார். 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்? ஊழல் வழக்கில் செப்டம்பர் 4ஆம் தேதி இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். இதன் முழு பின்னணி என்ன?📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
நேபாள பேரழிவுக்கு சில நிபுணர்கள் ஏன் சீனாவை சுட்டிக்காட்டுகின்றனர்? நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு, காலநிலை மாற்றத்தோடு திபெத் எல்லைப்புறப் பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களும் ஆற்றுப் பாதை மாற்றங்களுமே காரணம் எனப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது? பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் துலக்குதல், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல், வாயைக் கொப்பளித்தல் மட்டுமே போதாது. நம் உணவுமுறையும் அதற்கு மிகவும் முக்கியம். ஏன் தெரியுமா?📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
பாம்பு விரட்டி ஸ்பிரே அல்லது சில செடிகள் உண்மையிலேயே பாம்புகளை விரட்டுமா? வீடு, தோட்டம், விவசாய நிலம் போன்ற இடங்களில் பாம்புகள் வராமல் தடுக்கும் என்று இணையத்தில் பல்வேறு ஸ்பிரேக்களும் ரசாயனப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவை உண்மையில் பாம்புகளை விரட்டுகின்றனவா? அறிவியல் ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளனவா?📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம் நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா அதிமுக சார்பில் வென்ற எம்எல்ஏ பதவியை மீண்டும் கோருவது ஏன்? அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களில் இசக்கி சுப்பையா மட்டும் தனது ராஜிநாமாவை வாபஸ் பெற மனு அளித்த நிலையில், நீதிமன்றமும் சட்டப்பேரவையும் அதனை நிராகரித்துள்ளன.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'நம்ப முடியாத உற்சாகமான தருணம்' - கரும்பொருளின் முதல் தடயத்தை நெருங்கியதாக கூறும் விஞ்ஞானிகள் முதன்முறையாக இருண்ட பொருளை (Dark Matter) கண்டறிவதற்கு தாங்கள் ஒரு படி நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் இன்னும் சுயாதீன ஆய்வாளர்களால் சரிபார்க்கப்படவில்லை. 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
"சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம்" - விஜய் அறிவித்தது என்ன? முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
250 நாட்கள் கடலில் இருந்த 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் 'பாவ நகரான' பட்டாயா வந்தது ஏன்? எந்த துறைமுகத்திலும் நிற்காமல், கடலில் தொடர்ச்சியாக 250 நாட்கள் பயணித்த அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன், புதன்கிழமை தாய்லாந்தில் நங்கூரமிட்டது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
அபிநந்தன் தனியார் விமான நிறுவனத்தில் விமானியானார்: 2019-ல் பாகிஸ்தானில் பிடிபட்டபோது என்ன நடந்தது? இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
விடுதியில் பெண் செவிலியர் கொலை: 4 பேரை போலீஸ் சந்தேகித்த நிலையில் பைக் மெக்கானிக் சிக்கியது எப்படி? ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
Telegram Channel Link information