Telegram
Telegram Channel Link
Islamic Center Of Unayzah - Tamil Telegram Channel Link
👁
2
views
↗
0
joins
About this telegram channel link
You can view and join @Jalyatunaiza_ta right away.
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
468
subscribers
21 Aug 2026
latest post
மீலாது நபியை கொண்டாடலாமா ?
உண்மையான இறைநம்பிக்கையாளர் யார் ?
https://youtu.be/lKz_fPvMqD0
நபியவர்களை நேசிப்பது.
https://youtu.be/5nepNO-v-dU?si=lYwXIopN8k5DeRPn
அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் 1
இன்றைய மக்கா ஹரமின் ஜுமுஆ குத்பாவின் சுருக்கம்الحمد لله، والصلاة والسلام على رسول الله.இன்றைய ஹரமின் குத்பாவில் இமாம் அவர்கள், அல்லாஹ்வின் விருந்தாளிகளான ஹாஜிகளை வரவேற்று, ஹஜ்ஜு மப்ரூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மார்க்கத்தில் நிலைத்திருப்பது (الاستقامة) பற்றி எடுத்துரைத்தார்கள்.ஹஜ்ஜின் போது செய்த நற்செயல்கள், தொழுகைகள், திக்ருகள், குர்ஆன் ஓதுதல் மற்றும் பிற இபாதத்துகள் ஹஜ்ஜுடன் முடிந்து விடக்கூடாது. மாறாக, அவற்றை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:> وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ“உங்களுக்கு மரணம் வரும்வரை உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டே இருங்கள்.”(ஸூரத்துல் ஹிஜ்ர்: 99)மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருப்பவர்களுக்கு அல்லாஹ் மிகப்பெரிய நற்செய்தியை வழங்குகிறான்:> إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ“நிச்சயமாக ‘எங்கள் இறைவன் அல்லாஹ்வே’ என்று கூறி, பின்னர் அதில் உறுதியாக நிலைத்திருப்பவர்களிடம் வானவர்கள் இறங்கி, ‘அஞ்சாதீர்கள், கவலைப்படாதீர்கள்; உங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட சொர்க்கத்தின் நற்செய்தியால் மகிழ்ச்சியடையுங்கள்’ என்று கூறுவார்கள்.”(ஸூரத்து புஸ்ஸிலத்: 30)மேலும் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:> أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ“அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்கள், அவை சிறியதாக இருந்தாலும் தொடர்ந்து செய்யப்படுபவையாகும்.”(ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம்)அதனைத் தொடர்ந்து, மார்க்கத்தில் நிலைத்திருக்க நபி ﷺ அவர்கள் அடிக்கடி கேட்ட துஆவை நினைவூட்டினார்கள்:> يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ“இதயங்களைப் புரட்டிப் போடக்கூடியவனே! எனது இதயத்தை உன்னுடைய மார்க்கத்தில் உறுதியாக நிலைநிறுத்துவாயாக.”மார்க்கத்தில் நிலைத்திருக்க அல்லாஹ்விடம் இந்த துஆவை அதிகமாகக் கேட்க வேண்டும். தொழுகையைப் பேண வேண்டும். நற்செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.இறுதியாக, உலகின் பல பகுதிகளிலிருந்து வந்து ஹஜ்ஜை நிறைவேற்றிய அனைத்து ஹாஜிகளுக்கும் நன்றி தெரிவித்து, அவர்களுடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு ஹஜ்ஜு மப்ரூர் ஆக ஆக்கி, பாதுகாப்பாக தங்கள் இல்லங்களுக்கு திரும்பச் செய்ய வேண்டுமென்று துஆ செய்தார்கள்.மேலும், ஹஜ்ஜிற்கான சிறந்த ஏற்பாடுகளை செய்த சவூதி அரசாங்கத்திற்கும், அரசருக்கும், இளவரசருக்கும் அல்லாஹ்வின் அருளும் நன்மையும் கிடைக்க வேண்டுமென்று துஆ செய்து குத்பாவை நிறைவு செய்தார்கள்.அல்லாஹ் நம் அனைவரையும் மார்க்கத்தில் இறுதி வரை நிலைத்திருக்கச் செய்வானாக. ஆமீன்.وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ.
இன்றைய மக்கா ஹரமின் ஜுமுஆ குத்பாவின் சுருக்கம்.
ஹஜ்ஜத்துல் விதா உரைமக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை.மக்களே! இந்த (துல்ஹிஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் எவ்வாறு நீங்கள் புனிதமாகக் கருதுகிறீர்களோ, அதுபோலவே, உங்களில் ஒருவர் மற்றொருவரின் உயிரையும், பொருளையும், மரியாதையையும் புனிதமாகக் கருத வேண்டும்.ஒருவர் குற்றம் செய்தால், அந்தக் குற்றத்திற்கு தண்டனை அவருக்கே வழங்கப்படும் – அவரது உறவினருக்கல்ல.தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்யக் கூடாது; பிள்ளையும் தந்தைக்கு அநியாயம் செய்யக் கூடாது.தந்தையின் குற்றத்திற்கு பிள்ளையோ, பிள்ளையின் குற்றத்திற்கு தந்தையோ தண்டிக்கப்பட மாட்டார்கள்.அறிந்து கொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் என் காலடிகளுக்குக் கீழ் புதைத்து அழித்துவிட்டேன்.அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை நிறுத்த வேண்டும்.முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.அறியாமைக் கால வட்டிகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.முதலாவதாக, என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அபாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.பெண்கள் குறித்தும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.அவர்கள் அல்லாஹ்வின் அமானத்தாகவே உங்களிடம் வந்துள்ளார்கள்.அவர்களை நீங்கள் உங்கள் மனைவிகளாக ஏற்றது அல்லாஹ்வின் கட்டளையின்படியே.அவர்கள் மீது உங்கள் உரிமையாவது:– நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்தில் அவர்கள் அனுமதிக்கக் கூடாது.அவர்கள் மீறினால், காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள்.நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது:– அவர்களுக்கு உணவும் ஆடையும் நல்ல முறையில் அளிக்க வேண்டும்.மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்கின்ற ஒரு விஷயம் உள்ளது.அதைப் பின்பற்றினால் நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்.அதுவே அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும்.மக்களே! எனக்குப் பிறகு எந்த நபியும் (இறைத்தூதரும்) இல்லை.உங்களுக்குப் பிறகு எந்த புதிய சமுதாயமும் இல்லை.உங்களைப் படைத்த அல்லாஹ்வையே வணங்குங்கள்.– உங்கள்மீது கட்டாயமாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள்.– ரமழானில் நோன்பு வையுங்கள்.– உங்களுடைய செல்வத்துக்கான சகாத்தை மனமுவந்து வழங்குங்கள்.– உங்கள் இறைவனின் இல்லத்திற்குப் ஹஜ்ஜ் செய்யுங்கள்.– உங்களுடைய தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்.இவற்றை பின்பற்றினால், அல்லாஹ் உங்களுக்காக உருவாக்கிய சொர்க்கத்தில் நீங்கள் நுழைவீர்கள்.நிச்சயமாக உங்கள் இறைவனை நீங்கள் விரைவில் சந்திக்கப்போகிறீர்கள்.அப்போது, அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்யப்போகிறான்.எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை, சண்டை செய்து மீண்டும் வழிகேடுகளாக மாறாதீர்கள்.அறிந்து கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களை இந்த பூமியில் அவனை வணங்குவதை விட்டுவிட்டான்.ஆனால், நீங்கள் சிறிதாகவே எண்ணும் சிறிய பாவங்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, ஷைத்தானின் வழியில் நடப்பீர்கள் – அதில் அவன் மகிழ்வான்.மக்களே! அறிந்து கொள்ளுங்கள்!உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் மூலதந்தையும் ஒருவரே.அதனால், இறையச்சத்தைத் தவிர வேறு எதிலும்:– ஓர் அரபியருக்கு அரபியல்லாதவர் மீது,– அரபியல்லாதவருக்கு அரபியர் மீது,– ஒரு வெள்ளையருக்கு கருப்பர் மீது,– ஒரு கருப்பருக்கு வெள்ளையர் மீது எதுவும் சிறப்பு இல்லை.மறுமையில் என்னைப் பற்றி அல்லாஹ் உங்களிடம் விசாரிக்கும் போது, நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? என்று நபியவர் கேட்டார்கள்.அதற்கு, மக்கள் கூறினார்கள்:"நீங்கள் எடுத்துரைத்தீர்கள், நிறைவேற்றினீர்கள், நன்மையையே நாடினீர்கள்" என நாங்கள் சாட்சி கூறுகிறோம்.அப்போது நபியவர்கள் தங்கள் ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின் மக்களை நோக்கி திருப்பி மூன்று முறை கூறினார்கள்:"அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!"இந்த இடத்தில் உள்ள அனைவரும், இங்கு வராத மற்றவர்களுக்கும் இதைப் எடுத்துச் சொல்லுங்கள்.ஏனெனில், செய்தியை கேட்பவர்களில் சிலர், நேரடியாகக் கேட்டவர்களைவிட அதிக விளக்கத்தைப் பெறக்கூடியவர்களாக இருப்பார்கள்.---மூலம்:ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்நூல்: அர்-ரஹீகுல் மக்தூம் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)
https://youtu.be/K6Dk_XBddIE?si=DJiMVL7hljwSjgbV
https://youtu.be/D2F60_9hzY8?feature=shared
https://youtu.be/4epNCuapuFc?feature=shared
https://youtu.be/ooYhLu4YPMc?feature=shared
✨ ரமலான் சிந்தனை📘 *கேள்வி - பதில் போட்டி 2026* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியில்மொத்தம் *12,130* பேர் கலந்து கொண்டனர்.அதில் *10,974* பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றனர்.🌟 *மாஷா அல்லாஹ்!* மிகப் பெரிய சாதனை!🤲 *அல்ஹம்துலில்லாஹ்!* 🎉 குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட🏆 *30* வெற்றியாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!🌸 இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த *அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவானாக.* 📢 இன்ஷா அல்லாஹ் இது போன்று நடைபெறும் போட்டிகளில்தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குமாறுஅன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.🤲 அல்லாஹ் அனைவரின் முயற்சிகளையும் ஏற்றுக் கொண்டு, நன்மைகளைப் வாரி வழங்குவானாக ...!ஆமீன்.
Telegram Channel Link information
Category
Spiritual & Devotional
Country
🇦🇪 United_Arab_Emirates
Language
Arabic
Type
Telegram Channel Link
Subscribers
468