Telegram
Telegram Channel Link
Onlinemania TNPSC GROUP✍ Telegram Channel Link
👁
2
views
↗
0
joins
About this telegram channel link
Tnpsc gr2 free test series provides you syllabus wise indepth coverage on a daily basis.
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
477
subscribers
13 Oct 2026
latest post
*💥 ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு.*ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.சந்திப்பில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா; ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவின் மகன் நர லோகேஷும் பங்கேற்பு.
*பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம்.*1 முதல் 10ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 உடற்கல்வி வகுப்புகள்.11, 12ஆம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள்.பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையை வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.6,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன; நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜ்மோகன்.
*💥 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா சபாநாயகர் ஏற்றது சரியே - உயர்நீதிமன்றம்.*6 அதிமுக MLAக்கள் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.6 அதிமுக MLAக்கள் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.தகுதி நீக்கம் குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுக்கச் சபாநாயகருக்கு உத்தரவு.
சாதிக்க முடியாததைக் கூட சாதிக்க முடியும். தன்னம்பிக்கை எனும்மனோ சக்தியால்.முதலில் தன்னை மாற்றிக்கொள்ளதயாராக இருப்பவனே உலகை மாற்றத் தகுதியுடையவன். *- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் -
குறள் எண்: ௭௨௯(729)அதிகாரம்: அவையஞ்சாமைகுறள்:*கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்* *நல்லா ரவையஞ்சு வார்.* *உரை :* நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கீழானவர் என்று கூறுவர்.English : Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take. *தி ஆ ௨௦௫௭ கன்னி (புரட்டாசி-௨௬)* *தமிழ் வாழ்க*
*💥 எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு.*அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கிறது.வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
*💥 தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் ராஜேந்திர அர்லேக்கர், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனம்.*ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்கேரளம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமனம்ஒடிசா: பிரஜ் மோகன் ராம் (Braj Mohan Ram)கர்நாடகா: டாக்டர் சுதா யாதவ் (Dr. Sudha Yadav)உத்தரகாண்ட்: டாக்டர் தல் சிங் பிசேன் (Dr. Dhal Singh Bisen)சிக்கிம்: துஷ்யந்த் கௌதம் (Dushyant Gautam)
*📢 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு...*அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடுஇத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் 5 தினங்களில் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.gov.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*💥 மின் தட்டுப்பாடு; தனியாரிடம் யூனிட் ரூ.35க்கு வாங்கும் தமிழக அரசு.*தமிழகத்தில் நிலவும் கடும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்குகிறது டான்ஜெட்கோ.ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.35 வரை செலுத்தி தமிழக அரசு வாங்கி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையை சரி செய்து தடையற்ற மின்சாரத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கைமின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் 4,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியிருந்தது டான்ஜெட்கோ. டெண்டரில் ரூ.37 வரை ஒரு யூனிட் மின்சாரம் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.35க்கு கொள்முதல் என தகவல்
*💥 சென்னையில் போராடிய மருத்துவப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது.*சென்னையில் போராட்டம் நடத்த குவிந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் விரட்டி விரட்டி கைது.போலீஸ் கெடுபிடியை தாண்டி சென்னை வந்த பணியாளர்களும் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*விஞ்ஞானிகள் அதிர்ச்சி: பசிபிக் பெருங்கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவு!*‘எல் நினோ’ நிகழ்வால், பசிபிக் பெருங்கடலின் Nino3.4 பகுதியின் மேற்பரப்பு வெப்பம், கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்கு 29.70°C ஆக பதிவு.இது கடந்த 1982, 1997, 2015 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வலுவான ‘எல் நினோ’க்களின் போது பதிவான வெப்பநிலையை விட அதிகம்.எல் நினோ உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்பே வெப்பநிலை அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி.
*எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்றுக்கொண்ட சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல்.*மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ.வாக மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ.வாக சத்தியபாமா பதவியேற்றனர்.
*நாளை கூடுகிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு!*மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை (அக்.11) ஞாயிறு அன்று கூடுகிறது.CJP போராட்டத்தை தடுக்க, நீதிமன்ற உத்தரவையும் மீறி டெல்லி மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
*🔴 தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.*மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி2021, 2026 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வென்றதன் மூலம், மதுராந்தகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மரகதம் குமரவேல்.தாராபுரத்தில் காலை 10.30 மணி வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், அதற்கு பிறகான சுற்றுகளில் முன்னிலை பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று அபார வெற்றி.கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தற்போது தவெக சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
குறள் எண்: ௭௨௪(724)அதிகாரம்: அவையஞ்சாமைகுறள்:*கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற* *மிக்காருள் மிக்க கொளல்.* *உரை :* கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, அதிகம் கற்றவரிடம் கல்வியை மேலும் அறிந்து கொள்ள வேண்டும். *English :* What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more. *தி ஆ ௨0௫௭ கன்னி (புரட்டாசி -௨௧)* *தமிழ் வாழ்க*
*💥 தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு.*அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு.வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழக பெண்கள், பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்து, அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால் தங்க மோதிரம்.உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அந்த குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் - தமிழ்நாடு அரசு.
*🏏 மிகுந்த ஆவலாக உள்ளேன்: ஸ்மிருதி மந்தனா*“இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழுவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயணத்தில் இந்திய அணியை முன்னெடுத்து செல்ல என்னுடைய முழு பங்களிப்பை வழங்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.”
*✨ இன்றைய சிந்தனை: வங்கியில் போட்ட கணக்கு... வாழ்க்கையில் கிடைத்த பாடம்சில அனுபவங்கள் பெரிய விஷயங்களைச் சொல்லாமல், ஒரு சிறிய உண்மையை மட்டும் நமக்குப் புரிய வைத்துவிடுகின்றன.பல ஆண்டுகளாக வங்கிக்குச் செல்வது எனக்கு மிகவும் அரிதாகிவிட்டது. பெரும்பாலான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், வங்கியில் நேரடியாகச் செய்ய வேண்டிய வேலைகளும் குறைந்துவிட்டன. சமீபத்தில் நண்பரின் தாய்லாந்து பயணத்திற்காக டிமாண்ட் டிராஃப்ட் எடுக்க வேண்டியிருந்ததால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வங்கிக்குச் சென்றேன்.செல்வதற்கு முன்பே ஒரு கணக்கு போட்டிருந்தேன். “டிஜிட்டல் காலம். டிடி எடுப்பது அரை மணி நேரத்தில் முடிந்துவிடும்” என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த வேலை முடிய நான்கரை மணி நேரம் ஆகிவிட்டது.அங்கே சென்றபோதுதான், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டாலும், இன்னும் ஏராளமானோர் வங்கியை நேரடியாகச் சார்ந்திருப்பது தெரிந்தது. வயதானவர்கள் பலர் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். ஊழியர்களும் தங்களுக்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், ஒரு சாதாரண சேவைக்காக மக்கள் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது மட்டும் யோசிக்க வைத்தது.அப்போது, வயது எண்பதைக் கடந்திருக்கக்கூடிய ஒரு மூதாட்டி என்னிடம் பேசினார்.“தம்பி, ஒரு சின்ன வேலைக்காகத்தான் வந்தேன். ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கேன்... முன்னாடி எல்லாம் பேங்க்குக்கு வந்தா வேலை சுறுசுறுப்பா நடக்கும். இப்போ கம்ப்யூட்டர் வந்துடுச்சு, எல்லாமே சிஸ்டம் ஆயிடுச்சு… ஆனா ஒரு சின்ன வேலைக்குக்கூட காத்திருக்க வேண்டியிருக்கு” என்று வருத்தமாகச் சொன்னார்.பிறகு, “வாங்குற காசுக்கு வேலை பார்க்கணும்... இல்லனா அது உடம்புல ஒட்டாது. கடைசியில் அந்தப் பணத்தையெல்லாம் மருத்துவமனையில்தான் கொடுக்குற நிலை வரும். அது நீங்களா இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி” என்றார்.மூதாட்டி சொன்னது ஒரு குறையாக மட்டும் தெரியவில்லை. தொழில்நுட்பம் மாறிவிட்ட பிறகும், நடைமுறைகள் அதற்கேற்றபடி மாறியிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது.அதன்பிறகு தூதரகத்திற்குச் சென்றேன். அங்கே அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, சில நிமிடங்களிலேயே வேலை முடிந்துவிட்டது.அந்த இரண்டு அனுபவங்களும் சேர்ந்து ஒரு விஷயத்தை யோசிக்க வைத்தன. நாமும் பல நேரங்களில் வாழ்க்கையில் ஒரு விஷயம் எப்படி நடக்கும் என்று முன்கூட்டியே ஒரு கணக்கு போட்டுக்கொள்கிறோம். இது எளிதாக முடிந்துவிடும், அது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கை எப்போதும் நம்முடைய கணக்குப்படி நடப்பதில்லை.எளிதாக இருக்கும் என்று நினைத்த ஒரு விஷயம் நம்முடைய பொறுமையை நான்கரை மணி நேரம் சோதிக்கலாம். கடினமாக இருக்கும் என்று நினைத்த இன்னொரு விஷயம் சில நிமிடங்களில் முடிந்துவிடலாம்.நாம் போடும் கணக்கு ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே; வாழ்க்கை தருவது அனுபவம். அந்த வித்தியாசத்தை ஏற்றுக்கொண்டு, தேவையான இடத்தில் நம்முடைய அணுகுமுறையையும் மாற்றிக்கொள்வதுதான் வாழ்க்கையை இன்னும் எளிதாக வாழ்வதற்கான வழியாக இருக்கலாம்.– ஜி.எஸ்.பாலமுருகன்.
*💥 மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? - நீதிபதி கேள்வி.*டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.மது அருந்துபவர்களால் மிகுந்த தொல்லை ஏற்படுவதாக பெரம்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் உத்தரவு.
*💥 கண்முன் தெரிந்த 2 குழந்தைகள் எதிர்காலம்; புடவையுடன் புயலாய் ஓடிய தாய்!*ஜார்க்கண்ட்: ராம்கரில் ஊர்காவல் படைக்கான உடற்தகுதி தேர்வில் வெறும்காலுடன், சேலை அணிந்தபடி ஓடி 1,600 மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் கடந்துள்ளார் கவிதா குமாரி.கைம்பெண்ணான கவிதா 2 குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்த பணிக்கு சேர விரும்பி கடுமையாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். கனவை எட்டிபிடிக்க நினைத்துவிட்டால் உடையோ, சூழ்நிலையோ தடையாக இருக்காது என நெட்டிசன்கள் பாராட்டு
Telegram Channel Link information