Telegram
Telegram Channel Link
BBC News Tamil Telegram Channel Link
👁
1
views
↗
0
joins
About this telegram channel link
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
33
subscribers
14 Oct 2026
latest post
'ஆடையை இழுத்தனர், பிறப்புறுப்பு பகுதியில் உதைத்தனர்' - டெல்லி போலீஸ் மீது போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டங்களில் காவலில் எடுக்கப்பட்ட மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதா? போராட்டக்காரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் யாவை?📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
தவெக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதா? விசிக நிலைப்பாடு என்ன? முழு பின்னணி தவெக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதாகப் பரவிக் கொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து தவெக, பாமக, விசிக தரப்புகள் கூறுவது என்ன?📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
பெரிய மாநிலங்களின் பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம் – சாமானியர்களை எப்படி பாதிக்கிறது? தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெவ்வேறு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்படுகிறது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
நடனமாடி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் - இவர் ஏன் இப்படிச் செய்கிறார்? ஆந்திராவில் ராஜமகேந்திரவரத்தில் வெங்கட் என்பவர் இதனைச் செய்து வருகிறார். ஹெல்மெட்டின் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவதன் தேவை ஆகியவற்றை வலியுறுத்தி அவர் இதனை மேற்கொண்டு வருகிறார். 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஓபன்ஏஐ அலுவலகத்தில் 'ரகசிய ஒலிப்பதிவு கருவி' – ஊழியரை கண்டறிய ஏ.ஐ உதவியதாக கூறும் நிறுவனம் கலிஃபோர்னியாவில் உள்ள ஓபன்ஏஐ அலுவலகம் ஒன்றில் ரகசியமாகப் பதிவு செய்யும் கருவியைப் பொருத்தியதாக சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கக் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
சௌதியில் சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து - அவரது தந்தை, இலங்கை அரசு கூறியது என்ன? இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை செளதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
எரிமலை தீவில் வாழும் உலகின் மிகப்பெரிய பென்குயின் கூட்டம் ஆபத்தில் இருப்பது ஏன்? தொலைதூர எரிமலைத் தீவில் வாழும் சின்ஸ்ட்ராப் பென்குயின்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவுக்குக் காலநிலை மாற்றமே காரணம் எனக் கூறப்படுகிறது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
இறைச்சி மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேம்படுமா? கார்னிவோர் டயட் பற்றி 8 கேள்வி – பதில்கள் சமூக ஊடகங்களில் இந்த உணவுமுறைக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இது உடல்நலப் பிரச்னைகளைச் சரிசெய்யவும், உடற்தகுதியை மேம்படுத்தவும் உதவுவதாகப் பலர் கூறுகின்றனர்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
மமதா பானர்ஜி மீது 'தாக்குதல்' நடத்த முயற்சி - காவல்துறை கூறியது என்ன? மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜி மீது பெண் சிவில் தன்னார்வலர் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட 3 பேர் கைது – காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்க்யா ஷிண்டே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் இன்று கைது செய்துள்ளதாக அக்கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் விஜய் சந்திப்பு - இருவரும் என்ன பேசினர்? ஆந்திரா சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார். அப்போது, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'நீரில் விழுந்தாலும் இறப்பதில்லை': கோவை அருகே இரவில் படையெடுத்த வண்டுகளால் தூக்கத்தை தொலைத்த 3 கிராமங்கள் கோழித்தீவன குடோனிலிருந்து பரவி 3 கிராம மக்களை மிரட்டிய தானிய வண்டுகள்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஐபோன், டிவி, ஃபிரிட்ஜ் என தினசரி 'அன்பளிப்பாக' குவியும் பார்சல்களை கண்டு அஞ்சும் மதுரை இன்ஃப்ளூயன்சர் மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் வீரமணி என்பவர் தனது வீட்டு முகவரி மற்றும் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததால் ஒரு வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல்.முருகன் அறிவிப்பு - என்ன காரணம்? மத்திய இணை அமைச்சரான தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
சிஜேபி-யிடம் விலகி நிற்கும் ராகுல் காந்தி, நேஹா போராவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? திங்கள்கிழமை டெல்லி வீதிகளில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து நடைபயணம் மேற்கொண்ட ஒரே இளம் தலைவர் நேஹா போரா மட்டுமே. சிஜேபியிடம் ஒரு இடைவெளியைப் பேணும் ராகுல் காந்தி, மாணவர் சங்க தலைவர் நேஹா போராவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஹூத்தி தாக்குதலை தடுக்க சௌதி அரேபியாவுக்கு அமெரிக்கா உதவாதது ஏன்? 4 முக்கிய காரணங்கள் இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சௌதி அரேபியா முழுவதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது. சௌதி அரேபியா இத்தனை தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா ஏன் அதற்கு உதவவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - என்ன பேசப்படுகிறது? தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் சட்டமன்ற அமைப்பாக கேரள சட்டப்பேரவை உருவெடுத்துள்ளது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
ராகுல், மோதியுடன் அடுத்தடுத்த நாட்களில் சந்திப்பு – முதல்வர் விஜயின் நிலைப்பாடு உணர்த்துவது என்ன? தமிழக முதல்வர் விஜய், அடுத்தடுத்த நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்தது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'6 அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜிநாமா செல்லும்; தகுதிநீக்க விவகாரத்தில் 2 மாதக் கெடு' - நீதிமன்ற உத்தரவு என்ன? 'அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆறு பேரின் ராஜிநாமாவை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக் கொண்டது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 13) தீர்ப்பளித்துள்ளது.📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
'விமானங்கள் ஓட்டும் பெண்களால் இது முடியாதா?' - குஜராத்தில் ஆண்கள் சலூன் நடத்தும் பெண் பிகாரின் பாட்னாவை பூர்வீகமாகக் கொண்ட ரோஸி ஷேக், சுமார் 10 ஆண்டுகளாக சூரத்தில் வசித்து வருகிறார். தற்போது ஆண்களுக்கான சலூன் ஒன்றையும் நடத்தி வருகிறார். 📰 மேலும் வாசிக்க...PUBLISHED via @BBCTamil
Telegram Channel Link information
Category
News & Magazines
Country
🇬🇧 United_Kingdom
Language
English
Type
Telegram Channel Link
Subscribers
33